ஓசூரில் அஸ்ஸாம் மாநில போடோ தீவிரவாதி கைது
Subscribe to Oneindia Tamil
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அஸ்ஸாம் மாநில போடோ தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாங்டுங் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், அஸ்ஸாம் போலீசிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் லாங்டுங்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு ஆதரவளித்த மூன்று பேரிடமும் ஒசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பாபு கூறுகையில், அவரை அதிகாரப்பூர்வமாக இதுவரை கைது செய்யவில்லை. ஓசூர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் தீவிரவாதியா, இல்லையா என்பதை அஸ்ஸாம் போலீசார் வந்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றார்.
இந் நிலையில் லாங்டுங்கை விசாரிக்க அஸ்ஸாமிலிருந்து போலீசார் தமிழகம் வந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications