குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil

இருப்பினும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை தொடர்புடைய வழக்கில் மட்டும் தீர்ப்பை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது நினைனவிருக்கலாம்.
ஜாப்ரி கொலை வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. எஸ்.ஐ.டி. பலரையும் தொடர்ந்து விசாரித்து வருகிறது. எனவே இதில் மட்டும் தீர்ப்பு அறிவிக்கப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த மே 6ம் தேதி தீர்ப்புகளை வெளியிடுவதற்கு இதே பெஞ்ச் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications