சிவசேனா அலுவலகத்திற்குள் வெளிநாட்டவர் நுழைய தடை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் உள்ள சிவசேனா அலுவலகத்திற்குள் வெளிநாட்டவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மும்பையின் தாதர் பகுதியில் சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகமான சேனா பவன் உள்ளது. இங்கு தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி முன்பு உளவு பார்த்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இடம் தவிர மும்பையில் ஹெட்லி பல இடங்களை முன்பு வேவு பார்த்து் சென்றுள்ளான். இதையடுத்து சிவசேனா தலைமை அலுவலகத்திற்குள் இனி வெளிநாட்டவர்களை அனுமதிப்பதில்லை என்று அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

சிவசேனா குறித்தும், அதன் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்ய வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் சேனா பவனுக்கு வருகின்றனர். ஹெட்லியும் அப்படித்தான் வந்து சென்றதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மும்பை வந்த ஹெட்லி பல இடங்களை வீடியோ படம் எடுத்து லஷ்கர் அமைப்புக்குத் தகவல் கொடுத்தான் என்பது விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+