டிசம்பர் 5-ம் தேதி நாடு தழுவிய லாரி ஸ்ட்ரைக்!
சென்னை: சுங்க வரியைச் சீரமைக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே. நல்லதம்பி கூறுகையில், "அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டம், கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுவை மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் தனியார் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கெனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, 10 நாள்களுக்குள் சுங்க வரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச் சாவடிகளில் வசூலிப்பதைப் போன்று, தனியார் சுங்கச் சாவடிகளிலும் ஒரே சீரான சுங்க வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய நிலையில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டிச. 5-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 52 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்காது", என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications