இனி எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம்-அதிமுகவினருக்கு ஜெ. பூஸ்ட்

சட்டசபைத் தேர்தலை சந்திக்க படு தீவிரமாக இருக்கிறார் ஜெயலலிதா. ஊர் ஊராக கூட்டம் போட்டு கூட்டம் சேர்த்து வரும் அவர் நேற்று அனைத்து மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகள், கட்டளைகளைப் பிறப்பித்த அவர் கண்டிப்புடன் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
அப்போது ஜெயலலிதா பேசியாவது:
மேலவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நவம்பர் 9ம் தேதி வாக்காளர்கள் மனுக்கள் கொடுப்பதற்குரிய கடைசி நாள் என்பதால் மாவட்டச் செயலர்கள் அந்தந்த மாவட்டங்களில் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் பணியை நிறைவேற்ற வேண்டும்.
சட்டசபை தேர்தலில் பணியாற்றக் கூடிய பூத் கமிட்டி பட்டியல்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக இளைஞர் பாசறையிலிருந்து பூத் கமிட்டி பட்டியல் கேட்டிருந்தேன். அந்த பட்டியலும் சில மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை.
கோஷ்டிப் பூசலால் சேகர்பாபு பதவி பறிப்பு:
அ.தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கு முக்கிய கட்சிகள் தயாராகவுள்ளது. கூட்டணி குறித்த முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை வளர்ப்பதை விட கோஷ்டி பூசலையே வளர்த்துள்ளீர்கள். கோஷ்டி பூசல் காரணமாக சேகர்பாபுவிடமிருந்து மாவட்டச் செயலர் பதவியை எடுத்தேன்.
சில மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளது. செயல்பட முடியாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் யார், யார் என்பது எனக்கு தெரியும்.வேலை செய்யாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் தானாகவே முன் வந்து என்னிடம் அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லலாம். மற்றவர்கள் பணியாற்றுவதற்கு வழி விடலாம்.
பொறுமையாக இருக்கிறேன்
அப்படி செய்யாமல் இருப்பவர்கள் மீது நானே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்கட்சி மாவட்டச்செயலராக பணியாற்ற விட்டு, கடைசி நேரத்தில் பதவியிலிருந்து எடுத்து விட்டீர்கள் என நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நான் பொறுமையாக இருக்கிறேன்.
கட்சி நிர்வாகிகளை எப்படி நியமிக்க வேண்டும் என முதலில் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன். அந்ததிட்டம் மீது குறை சொல்லப்பட்டது. பின் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமித்தேன். ஆனால், அவர்களும் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன்
இன்னும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்கவும், வேண்டப்படாதவர்களை நீக்கவும் பரிந்துரை செய்கின்றனர். உண்மையாக கட்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சில மாதங்களாக உங்களை நான் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன்.
மாவட்டச் செயலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கும் கட்சி பணிகள் தொடர்பான தகவலை வரும் 1ம் தேதி முதல் தினமும் எனக்கு தெரிவிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். அவரிடம் கூறினேன், இவரிடம் கூறினேன் என்ற பிரச்னை இனிமேல் இருக்கக் கூடாது என்றார் ஜெயலலிதா.
கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தம்பித்துரை, பொன்னையன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களிடம் தொகுதி நிலவரங்களை மாவட்ட வாரியாக கேட்டறிந்தார் ஜெயலலிதா. வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக செயல்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டங்கள் நடத்தும்போது, முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, திமுகவினர் மீது கூறப்படும் ஊழல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்டவற்றை ஹைலைட்டாக கூறிப் பேசும்படியும் அவர் கட்சியினரை வலியுறுத்தினார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications