திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய தம்பி
சென்னை: சென்னை திருவொற்றியூரில் திருமண நாளன்று தாலிகட்ட வேண்டிய மாப்பிள்ளை ஓடிவிட்டதால் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் தம்பி தாலி கட்டினார்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் டில்லி பாஸ்கர் (29). வெல்டிங் வேலை பார்ப்பவர். இவருக்கு தீனதயாளன் (32) என்ற அண்ணனும், புருசோத்தமன் (26) என்ற தம்பியும் உள்ளனர்.
இவர்களின் தந்தை இறந்தபிறகு பாஸ்கர் தன் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் கங்கனூரைச் சேர்ந்த வேலு என்பவரின் மகள் விஜயலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமானது.
திருமணத்திற்கு முதல் நாள் இரவு அழகு நிலையம் சென்று வருவதாகச் சொல்லிச் சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பவில்லை. மறுநாள் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை இல்லாமல் போக பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பேசிய கல்யாணம் நின்றால் நம் பெண்ணுக்குப் பெரும் பாதகமாகி விடும் என்பதால், தீனதயாளனை அணுகி, டில்லி பாஸ்கருக்குப் பதில் அவருடைய தம்பி புருசோத்தமனை தாலி கட்டச் சொல்லி பெண் வீட்டார் கேட்டனர்.
இதையடுத்து அவரை சம்மதிக்க வைத்து குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே திருமணம் நடந்தது.
அதன் பின்னர் பாஸ்கர் மீது திருவொற்றியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் டில்லி பாஸ்கரைத் தேடி வருகின்றனர்.
கல்யாண நாளின்போது மாப்பிள்ளை டில்லி ஏன் ஓடினார் என்பது தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications