தொடர் கொலை-கொள்ளை: ஆலங்குடி போலீஸ் கூண்டோடு மாற்றம்
ஆலங்குடி: முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலம், திமுக செயலாளர் மணிமாறன் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, திமுக எம்.எல்.ஏவின் கார் டயர்கள் திருடு போனது ஆகியவை எதிரொலியாக ஆலங்குடி காவல் நிலைய போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து சில வாரங்களே ஆன நிலையில் சமீபத்தில் திமுக செயலாளர் மணிமாறன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இதுபோக ஒரு திமுக எம்.எல்.ஏவின் கார் டயர்கள் திருடிச் செல்லப்பட்டன. இந்த சம்பவங்களால் ஆலங்குடி மக்கள் பெரும் பீதியடைந்தனர். நகர் முழுவதும் தொடர்நது பதட்டம் நிலவி வருகிறது. இரு பெரும் கொலைகளால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மணிமாறன், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவம் நடக்க இருப்பது காவல்துறைக்கு தெரிந்திருந்தும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாததால், இந்த கொலை சம்பவம் நடந்துவிட்டது என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் ஆலங்குடி போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். எஸ்பிசிஐடி எஸ்.ஐ. கவுதமன் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆலங்குடி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் கலியராஜ், இந்திரா, ஏட்டுகள் ரவி, சோலையம்மாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications