உ.பியில் பயங்கரம்-முலாயம் கட்சி எம்.எல்.ஏ மகன் அட்டூழியம்-ஒருவரை சுட்டுக் கொன்றார்
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.-வின் மகன் குடிபோதையில் ஒருவரை சுட்டுக் கொன்றார். அவரது வெறித்தனமான செயலால் 2 பேர் காயமடைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் கங்க்வார். இவரது மகன் அதுல் கங்கவார். இவரும், இவரது நண்பர்களும் குடிபோதையில் ஓட்டிச் சென்ற வாகனம் ராணுவ அதிகாரி ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் இரு சக்கர வாகனம் சேதம் அடைந்தது.
வாகனத்தை தானே சரிசெய்து தருவதாகக் கூறி அதுல் அந்த ராணுவ அதிகாரியுடன் அருகிலுள்ள ஹீரோ ஹோண்டா ஷோரூமுடன் இணைந்த மெக்கானிக் ஷாப்புக்குச் சென்றுள்ளார். வேலை நேரம் முடிந்ததால் பழுது பார்க்க முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டவுடன் அதுல் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நகராட்சி ஊழியர் சரண்சிங், ஷாப்பின் காசாளர் அகிலேஷ் குமார் மற்றும் மேலாளர் ராஜீவ் சர்மா ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தபோது தலையில் குண்டுபாய்ந்த சரண்சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதுலை கைது செய்தனர். அவரின் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானபோது அவர் குடிபோதையில் இருந்தததாகத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications