ஹெட்லி குறித்த தகவலை இந்தியாவிடம் கூறாமல் அமெரிக்கா மறைத்து விட்டது-பிள்ளை

இதுகுறித்து பிள்ளை கூறுகையில், பாகிஸ்தானிய அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் குறித்த சதித் திட்டத்தில் தொடர்பு கொண்டிருப்பது குறித்த தகவலை முன்பே அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவிக்காதது பெருத்த ஏமாற்றத்தையே தருகிறது.
ஹெட்லியின் பெயரை அவர்கள் ஒருபோதும் நமக்குத் தெரிவிக்கவில்லை. அவர்கள் முன்பே சொல்லியிருந்தால், மும்பைத் தாக்குதல் திட்டத்தைத் தடுத்திருக்கலாம். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ஹெட்லி இந்தியாவுக்கு வந்தபோது அவனை எளிதாக பிடித்திருக்கலாம்.
மும்பைத் தாக்குதலுக்கு முன்பும் சரி, பின்னரும் சரி ஹெட்லியின் பெயரை அமெரிக்கா நமக்குத் தரவில்லை என்பதே உண்மை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கத் தயாராக உள்ளோம்.
ஒபாமா வருகையின்போது அசம்பாவிதம் நடக்குமா என்பது குறித்து எந்த உளவுத் தகவலும் இதுவரை இல்லை. இருப்பினும் ஒபாமாவின் வருகை பிரச்சினையில்லாமல் முடியும் என்று நம்புகிறோம். அதற்கேற்ப அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வில் இந்தியா, அமெரிக்கா இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் பிள்ளை.
ஹெட்லி குறித்த பிள்ளையின் கருத்து தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம்மோத்தி ரோமர் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு முன்பும், பின்பும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து உளவுத் துறைத் தகவல்களை இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்டுள்ளது.
ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்தியா கோரியபோது, அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்றார். ஆனால் ஹெட்லி பெயரை இந்தியாவிடம் கூறினோம் என்று ரோமர் தெரிவிக்கவில்லை.
ஹெட்லி, அமெரிக்காவுக்கே ஒரு உளவாளியாக இருந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்தத் தகவலையும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து மறைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications