கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தமிழகத்திற்கு 20,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர் தற்போது தண்ணீர் திறந்து விடக் கூடிய சாதகமான நிலை என்று 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் எதியூரப்பா கூறியிருந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி உபரி நீரை திறந்து விட்டுள்ளது கர்நாடகா.
2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எதியூரப்பா, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கூடிய சாதகமான நிலை தற்போது இல்லை. இப்போது உள்ள நீர் இருப்பு எங்களுக்கே போதாது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து நேற்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், காவிரியில் தமிழகத்தின் பங்கு நீரைப் பெற சட்ட ரீதியாக தொடர்ந்து வாதிடுவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
கர்நாடக அணைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், அணைகளுக்கு அபரிமிதமான நீர் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்தே முக்கிய அணையான கிருஷ்ண ராஜ சாகரிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடகா.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4000 கன அடி நீர் வரை வந்து கொண்டிருந்தது. இன்று பிற்பகல் அது அதிகரித்து விநாடிக்கு 7230 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications