தீபாவளி நெருக்கடி: புதிய எரிவாயு இணைப்புகள் நிறுத்தம்!
சென்னை: தீபாவளி நேரம் என்பதால், சமையல் எரிவாயு தேவையைச் சமாளிக்க, புதிய இணைப்பு தருவதை நிறுத்தி வைத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசி) இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (எச்.பி.சி.) ஆகிய மூன்று எண்ணை நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகம் செய்து வருகின்றன.
சமீப காலமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருந்து வருகிறது. பதிவு செய்து 30 நாட்களுக்கு பிறகுதான் சிலிண்டர் வழங்கப்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை காலம், அதுவும் மழைக்காலம் என்பதால் எரிவாயு பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய சமையல் இணைப்புகள் வழங்குவதை 3 எண்ணை நிறுவனங்களும் நிறுத்தி வைத்துள்ளன. 5 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகே புதிய இணைப்புகள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய இணைப்புக்காக காத்திருப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
"சிலிண்டர் தட்டுப்பாடாக இருப்பதால்தான் இப்படி நிறுத்தி வைத்துள்ளோம். தற்போது நிலைமை சீராகி வருகிறது. புதிய இணைப்பு கேட்பவர்களுக்கு பெயரை ஏஜென்சியிடம் பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமாக இணைப்பு வழங்கப்படும்... பொங்கலுக்குப் பிறகு தட்டுப்பாடு நீங்கும்" என்கிறார்கள் இந்தியன் ஆயில் நிறுவனத் தரப்பில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications