காஷ்மீரில் கார் விபத்து-குமரி ராணுவ என்ஜினியர், தந்தை உள்பட 5 பேர் பலி
திங்கள்சந்தை: காஷ்மீர் லே பகுதிக்கு சுற்றுலா சென்றபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்து குமரி ராணுவ என்ஜினியர், அவரது தந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.
குமரி மாவட்டம் நெய்யூர் முரசங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். கட்டிட கான்டிராக்டர். இவருக்கு பிர்லியன் ஜோசப், டென்சிங் ஜோசப் என்ற மகன்களும், கோல்டு சோபியா என்ற மகளும் உண்டு. ஜோசப்ராஜின் மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
பிர்லியன் ஜோசப் காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் ராணுவத்தில் சிவில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் முரசங்கோடு வந்தவர் திரும்பிச் செல்லும்போது தந்தை ஜோசப்ராஜை அழைத்து சென்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தந்தை மற்றும் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை அழைத்து கொண்டு ஒரு காரில் லே பகுதிக்குச் சென்றார். அப்போது எதிர்பாராவிதமாக கார் விபத்துக்கு உள்ளாகி 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில் பிர்லியன் ஜோசப், அவரது தந்தை ஜோசப்ராஜ் மற்றும் நண்பர்கள் மூவர் உள்பட 5 பேரும் பலியானார்கள். தகவல் அறிந்த லே பகுதி ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணங்களை மீட்டனர். இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜோசப்ராஜ் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. இன்று முரசங்கோடு பகுதிக்கு கார் மூலம் எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications