நோக்கியா செல்போன் நிறுவன ரோபோட் எந்திரத்திற்குள் சிக்கி பெண் கோர மரணம்
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் நிறுவனத்தில் ரோபோட் எந்திரத்திற்குள் சிக்கி பெண் தொழிலாளர் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் 22 வயதான அம்பிகா என்ற தொழிலாளர். இவர் ஆரணியைச் சேர்ந்தவர்.
நேற்று தொழிற்சாலையில் உள்ள ரோபோட்கள் (தானியங்கி எந்திரங்கள்) பணியமர்த்தப்பட்டுள்ள 3வது உற்பத்திப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில், அவரது தலையும், கழுத்தும் அந்த எந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் அலறித் துடித்த அம்பிகாவின் குரலைக் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். கடுமையாகப் போராடி அம்பிகாவை மீட்டனர். ஆனால் அதற்குள் பெருமளவில் ரத்தத்தை இழந்து விட்டார் அம்பிகா.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எந்த சூழ்நிலையில் இந்த விபத்து நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
ஊழியர்களிந் பாதுகாப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது பெரும் வருத்தம் தருகிறது என்றார்.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்று நோக்கியா நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications