தமிழகத்தை காங். ஆள திராவிட கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்-பச்சமுத்து
திருச்சி: தமிழகத்தை காங்கிரஸ் ஆள திராவிட கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே இருங்களூரில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடும். மொத்தம் 234 தொகுதகளில் 10 தொகுதிகளு்ககு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். மற்ற தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவர்.
ஒருவேளை கூட்டணி அமைந்தாலும், அறிவிக்கப்பட்டுள்ள 10 சட்டசபை தொகுதி வேட்பாளர் இடங்களை விட்டுத்தர மாட்டோம்.
இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் வேட்பாளர் நிறுத்தப்படுவர். அகில இந்திய அளவில் எங்கள் கட்சி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தியாவை 100 குடும்பங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. மன்னராட்சி போல் நடைபெறுவதால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.
இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தொழிலில் முதலீடு செய்து, இளைஞர்கள் உழைத்து முன்னேற வழி செய்ய வேண்டும்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை ஆளும் திராவிட கட்சிகளால் தான் மாநில அளவில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. மத்தியிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால், மூன்று மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை தீரும். எனவே, திராவிட கட்சிகள், காங்கிரஸ் ஆட்சி அமைய தியாக மனப்பான்மையுடன் விட்டுத்தர வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications