தேர்தல் நெருங்குவதால் ஜெ.வுக்கு திடீரென காவிரி குறித்து கவலை-கனிமொழி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தான் ஜெயலலிதா திடீரென காவிரிப் பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்துள்ளார் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், காவிரிப் பிரச்சனையில், தமிழகத்துக்கு சாதகமான நிலையை உருவாக்கத் தேவையான அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், திடீரென விழித்தெழுந்துள்ள ஜெயலலிதா காவிரி பிரச்சனை குறித்து ஜெயலலிதா பேச ஆரம்பித்துள்ளார். இது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மிகுந்த முக்கியத்துவம் அளிக்க அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும்.
தமிழகத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு முகாம்களுக்கு இளைஞர்கள், பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள முகாம் குறித்து விரைவில் விவரம் அறிவிக்கப்படும்.
இந்த முகாம்களில் மாற்றுத் திறனாளிகளுக்கும் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications