குத்தகைதாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நாங்குநேரி ஜீயர் மகன் மீது புகார்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: குத்தகைதாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நாங்குநேரி ஜீயர் மகன் மீது புகார் எழுந்துள்ளது.
நாங்குநேரி ஜீயர் மடத்துக்கு சொந்தமாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அவர்களிடம் பணம் கேட்டு ஜீயரின் மகன் மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் நேற்று எஸ்பி அலுவலகத்திற்கு வந்து விவசாயிகள் மனு கொடுத்தார்.
அதி்ல் பணம் கொடுக்கவில்லையென்றால் குத்தகையை வேறு நபருக்கு மாற்றி விடுவதாகவும், தலித் விவசாயிகளை ஜாதி பெயரை சொல்லி தி்ட்டுவதாகவும், எனவே அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications