நெல்லை தேமுதிகவில் கோஷ்டி பூசல்-முக்கிய பிரமுகர்கள் நீக்கம், விலகல்
நெல்லை: நெல்லை மாவட்ட தேமுதிகவில் கோஷ்டி பூசல் காரணமாக முக்கிய பொறுப்பாளர்கள் நீக்கமும், ராஜினாமாவும் தெடர்கிறது. இதனால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விஜயகாந்த்தின் தேமுதிக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை வாங்கியது.
தேமுதிக ஆரம்பித்த உடன் விஜயகாந்த்தின் கேப்டன் மன்றத்தினருக்கு (அதாவது ரசிகர்களுக்கு) கட்சி பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற குரல் இன்று வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ளது. இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் கோஷ்டிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ளது.
நெல்லை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த திருப்பதி, சங்கரன்கோவிலை சேர்ந்த சில பிரமுகர்கள் மீது தலைமையிடம் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது.
ஆனால் சிலமாதங்களில் சூழ்நிலை புகார் கூறிய திருப்பதியையே விஜயகாந்த் நீக்கினார். அதுபோல் வேறு சிலரையும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் தலைமையில் சங்கரன்கோவில் நடந்த கூட்டத்தில் கோஷ்டி மோதல் பலமாக வெடித்தது.
மாவட்ட அவை தலைவராக இருந்த கணேசன் தனது பதவியை ராஜினமா செய்து வி்ட்டு கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களை மதிக்க தெரியாதவர்களிடம் வேலை பார்ப்பது வீண் என்று கூறி வெளியேறி வி்ட்டார்.
நகர, கிளை கழகங்களில் கோஷ்டி பூசல் இப்போது வலுவடைய தொடங்கியுள்ளதால் கட்சியின் உண்மை தொண்டர்கள் பூசல் காரணமாக வேதனையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications