பென்ஷன் பிரச்சனை: பி.பி.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரேடியோ, டிவி சேவைகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சியின் ஊழியர்கள் ஓய்வுதிய பிரச்சனைக் காரமணாக 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒலி-ஒளிபரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்படும் பி.பி.சி. தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக நிறுவன அதிகாரிகளுக்கும் ஊழியர்க சங்க பிரநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதனால் செய்திகள் சேகரிப்பதும், ஒலி-ஒளிபரப்பும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications