தணிக்கை அதிகாரி அறிக்கை-ராசாவை நீக்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

அக் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விவகாரத்தில் அரசுக்கு ரூ.1.90 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது.

ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்,​​ நிதி அமைச்சகங்களின் அறிவுரைகளையும் தொலைத்தொடர்பு அமைச்சகம் புறக்கணித்தது என்று கூறி வந்தோம்.​ அதையே மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே,​​ அமைச்சர் ராசாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.​ இதை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+