செல்போன் வாடிக்கையாளர்கள் சான்று அளிக்க அவகாசம் மேலும் 2 மாதம் நீடிப்பு

செல்போன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் முகவரி மற்றும் அடையாளச் சான்றுகளை சரிபார்க்கும் பணியை இந்தாண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தொலை தொடர்புத் துறை உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்தப் பணியை உரிய காலத்தில் முடிக்க முடியாததால் மேலும் கால அவகாசம் கேட்டன செல்போன் நிறுவனங்கள்.
ஏற்கனவே பலமுறை கால நீட்டிப்பு தரப்பட்டுள்ள நிலையில் இப்போதும் டிசம்பர் 31ம் தேதி வரை, 2 மாத காலம் காலக்கெடுவை தொலைத் தொடர்புத்துறை நீட்டிள்ளது.
செல்போன் சேவை நிறுவனத்தில், சரியான தகவல்கள் இல்லாத வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.50,000 என்ற அடிப்படையில் கணக்கிட்டு தொலை தொடர்புத் துறைக்கு அபராதம் செலுத்த வேண்டும்.
இது, 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒரு டிக்கையாளருக்கு ரூ.1,000 என்ற அடிப்படையில் கணக்கிட்டு அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சென்ற ஆகஸ்டு மாதத்தில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 67 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications