அமைச்சர் சுரேஷ் ராஜன் உருக்கு ஆலை, வீட்டில் கலால்துறை அதிகாரிகள் ரெய்டு
நாகர்கோவில்: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜனுக்குச் சொந்தமான உருக்கு ஆலை, அலுவலகம் மற்றும் அமைச்சரின் வீடு ஆகியவற்றில் நேற்று முழுவதும் மத்திய கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் என்.எஸ்.ஆர். ஸ்டீல் பிளான்ட் என்ற உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய இரும்புப் பொருள்களை உருக்கி முறுக்குக் கம்பிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலை தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜனுக்குச் சொந்தமானது.
இங்கு தயாராகும் முறுக்குக் கம்பிகளுக்கு உரிய கலால் வரி முறையாக செலுத்தப்படவில்லை என்றும், வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து, திருநெல்வேலியிலுள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை அலுவலகத்திலிருந்து கலால் துறை பிரிவைச் சேர்ந்த கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான 7 அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை அந்த உருக்கு ஆலை மற்றும் அதன் நிர்வாக அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
என்.எஸ்.ஆர். உருக்கு ஆலையின் நிர்வாக அலுவலகம் நாகர்கோவில் வெள்ளாளர் காலனியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. பின்னர், பழவூரில் உள்ள உருக்கு ஆலையில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை மாலை 5.45 மணிவரை நீடித்தது. பழவூர் ஆலை மற்றும் நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இதேபோல நாகர்கோவில் அருகே உள்ள ராமவர்மபுரத்தில் அமைச்சர் சுரேஷ் ராஜனின் வீடு உள்ளது. அங்கும் நேற்றுகாலை முதல் பிற்பகல் வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இங்கு இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications