போர்க்குற்ற விசாரணை கோரும் அல்சஜீரா-இலங்கைக்கு நெருக்கடி
கொழும்பு: இலங்கை அரசின் போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்பது தொடர்பான நிகழ்ச்சிகளை சர்வதேச தொலைக்காட்சியான அல்ஜசீரா தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களை அந்நாட்டு அரசு ஈவு இரக்கம் இனறி படு கொலை செய்துள்ளதாகவும், மேலும் போர் குற்றத்தில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனையடுத்து, ஐ.நா. சபையும் போர் குற்றம் குறித்த ஆதராங்களை கேட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து குளோபல் தமிழ் ஃபோரமும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினரும், மற்றும் கனடாவில் இருந்தும் பலர் போர்க்குற்றம் தொடர்பாகவும், இன அழிப்புத் தொடர்பாகவும் விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.
குளோபல் தமிழ் ஃபோரம் அமைப்பின் தலைவர் இமானுவேல் அடிகளார் இது குறித்த முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வழங்கியுள்ளார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரி ஒருவரும் இச்சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா தனது ஒவ்வொரு மணிநேரச் செய்தியிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதால் இலங்கை அரசு மேலும் சங்கடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை அமைச்சர் ஒருவரை அல்ஜசீரா தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்பு கொண்டபோது அவர் அக் குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, வெளியான அனைத்துப் புகைப்படங்களும் பொய்யானவை எனக் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications