ருசிகா பாலியல் பலாத்கார வழக்கு-மாஜி டிஜிபி ரத்தோருக்கு ஜாமீன்

ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.செளஹான் அடஹ்கிய பெஞ்ச், ரத்தோர், சண்டிகர் தலைமை நீதித்துறை நடுவரின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.
ருச்சிகா குடும்பத்தினர், ரத்தோர் மீது கூறிய புகார்களின் அடிப்படையில் அவர் மீது சிபிஐ புதிதாக 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் 2 வழக்குகளைப் பரிசீலித்த பின்னர் இந்த ஜாமீன் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் ரத்தோருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையில் அவர் 6 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளதாலும் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மோசடி செய்தது (இதுகுறித்து ருச்சிகாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார்), சித்திரவதை செய்தது, 14 வயது சிறுமியாக இருந்த ருச்சிகாவை தற்கொலைக்குத் தூண்டியது (இரண்டும் சகோதரர் அஷு கொடுத்த புகார்கள்) ஆகிய புதிய வழக்குகள் தற்போது ரத்தோர் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டு வழக்குகளில் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டது. தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ரத்தோருக்கு வெறும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து சண்டிகர் கோர்ட் உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரத்தோர் மீது புதிய வழக்குகளைப் பதிவு செய்தது சிபிஐ என்பது நினைவிருக்கலாம்.
மேலும் சண்டிகர் சிபிஐ கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டிலும் சிபிஐ அப்பீல் செய்தது. அதை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் ரத்தோருக்கான தண்டனையை 18 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டது.
இளம் டென்னிஸ் வீராங்கனையான ருச்சிகா, 1990ம் ஆண்டு ரத்தோரால் பாலியல் பலாத்கார சித்திரவதைக்கு உள்ளானார். அந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ருச்சிகாவை பலவந்தப்படுத்தி கற்பழித்தார் ரத்தோர். பின்னர் 3 ஆண்டுகள் கழித்து ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications