மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
நெல்லை: பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் டாக்டர் மகனுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஆக்னஸ். இவர் தனது மகனுக்கு சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மருத்துவ படிப்பு படிக்க சீட் வாங்கித்தரும்படி பாளையைச் சேர்ந்த டாக்டர் அசீம், அவரது தந்தை அல் அமீன் மற்றும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி டாக்டர் மோகன் ஆகியோரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு மெடிக்கல் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டாக்டர் ஆக்னஸ் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.
நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவின் பேரில் மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சேவியர், இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் விசாரணை நடத்தி டாக்டர்கள் அசீம், மோகன் மற்றும் அல் அமீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications