காங்கிரஸுக்கு திடீர் ஆதரவு-ஜெ. போக்கை பொறுத்திருந்து பார்ப்போம்-சிபிஎம்
சென்னை: மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போக்கை பொறுத்திருந்து பார்க்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில்,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலாகும்.
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரே அறிக்கை அளித்த பிறகும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அமைச்சர் ஆ. ராசா தானாக பதவி விலக வேண்டும்; இல்லையெனில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி இப்போது எந்த கருத்தையும் கூற மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை.
அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
ஒருவேளை ஜெயலலிதா ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள் தனியாக பிரிந்து போய் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூடி புதுக் கூட்டணி அமைக்குமா அல்லது நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல என்று கூறி சமரசம் செய்து கொண்டு அங்கேயே தங்கி விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications