கட்சி தாவல் சட்டப்படி அமர்சிங், ஜெயபிரதா பதவியை பறிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

அமர்சிங், ஜெயபிரதா ஆகிய இருவரும் சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.பி.களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டு ஏற்கனவே நீக்கி விட்டனர். இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கான ஓட்டெடுப்பில் இருவரும் கட்சி கொறடாவின் கட்டளையை மீறி மசோதாவை ஆதரி்த்து ஓட்டுபோட்டனர்.
எனவே, கட்சி கொறடாவின் கட்டளையை மீறியதற்காக கட்சித் தாவல் தடை சட்டப்படி இருவரின் எம்.பி. பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அல்ட்மாஸ்சபீர் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வநதது. வழக்கை விசாரித்த பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
ஓட்டுபோடும் முன்பே இருவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டனர். இதனால் அவர்கள் கட்சி கொறடாவின் கட்டளையை ஏற்க வேண்டியது இல்லை. ஆகையால் அவர்களின் பதவியைப் பறிக்க முடியாது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம் இருவரது எம்.பி. பதவியும் தப்பியுள்ளது. தற்போது அமர்சிங் ஒரு புதுக் கட்சியைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக ஜெயப்பிரதாவும் அக்கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications