குழந்தைகள் தினத்தில் துயரம்-கொதிக்கும் பாலில் விழுந்து குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
மால்டா: மேற்கு வங்கத்தில் கொதிக்கும் பால் பாத்திரத்தில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது ஆக்ரா-ஹரிஷ்சந்திரபூர். இந்த கிராமம் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ளது.
குழந்தைகள் தினமான நேற்று இங்குள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தேப் கோஸ் கொதிக்கும் பால் பாத்திரத்தில் தவறி விழுந்தது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் குழந்தை தேப் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications