டெல்லி விமான நிலையத்தில் பெரும் குழப்பம்-வெங்கையாவின் பேக் மாயம்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி3 புதிய முனையம் செயல்படத் தொடங்கியது முதல் ஏகப்பட்ட குழப்பம். விமானங்களின் வருகை, புறப்பாட்டில் குழப்பம் தொடங்கி பயணிகளின் உடமைகள் காணாமல் போவது வரை பெரும் குழப்பமாக உள்ளது.
லேட்டஸ்டாக மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவின் பேக் காணாமல் போய் விட்டது. அது இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டி3 டெர்மினலை சமீபத்தில்தான் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதையடுத்து அக்டோபர் 31ம் தேதி முதல் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.ஆனால் அன்று முதல் இன்று வரை ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள்.
விமானங்கள் தாமதம், பயணிகளின் உடமைகள் காணாமல் போவது, அவை பயணிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் என பயணிகள் கடும் எரிச்சலில் உள்ளனர்.
இந்த முனையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் விமான சேவைதான் பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வெங்கையாவின் பேக் காணாமல் போய் விட்டது. இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், நவம்பர் 11ம் தேதி டெல்லியிலிருந்து ஹைதராபாத் கிளம்பினார் வெங்கையா நாயுடு. விமானம் ஏற்கனவே முக்கால் மணிநேரம் தாமதமாகத்தான் கிளம்பியது.
ஹைதராபாத் போய் அவர் இறங்கியதும் தனது பேக்கைக் காணாமல் அதிர்ந்தார் வெங்கையா. இதையடுத்து விமானப்போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலைத் தொடர்பு கொண்டு கோபத்துடன் பேசினார். பயணிகளின் உடமைகளை இப்படியா ஏர் இந்தியா நிறுவனம் பொறுப்பில்லாமல் கையாளுவது என கொந்தளித்தார்.
அடுத்த நாள் ஏர் இந்தியா தலைவர் நிர்வாக இயக்குநர் அரவிந்த ஜாதவ் வெங்கையா நாயுடுவைத் தொடர்பு கொண்டு, அவரது பேக்கை விரைவில் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை பேக் திரும்ப வரவில்லையாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications