நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்திடவே ராஜா விலகினார்-கருணாநிதி
சென்னை: நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அண்ணா அந்த நெறியில்தான் நம்மை எல்லாம் வளர்த்தார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதன் அடிப்படையில்தான் ராஜா விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான ராசா, தி.மு.க.வுக்கும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமை உணர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து, தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர்.
அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று திட்டமிட்ட முயற்சி பல நாள்களாக நடைபெற்று வந்தது. ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிட்டது.
நாட்டு மக்களுடைய பிரச்னைகளை விவாதிக்க முடியாத அளவுக்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது? மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய 1999 முதல் எந்த முறை பின்பற்றப்பட்டதோ, அதே முறையைத்தான் ராசா பின்பற்றினார்.
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல், அவர் ராஜிநாமா செய்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் செய்து, நாடாளுமன்ற அவைகளை நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.
எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்கப் பலர் தேவையில்லை; சிலரே போதும்; நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடைப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அண்ணா அந்த நெறியில்தான் நம்மை எல்லாம் வளர்த்தார்.
அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
அதனை நிலைநாட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள ஆ. ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்வது என்று முடிவு எடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கிடுவார் என்று தெரிவித்திருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications