வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் மனு: ஜன-5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க 5 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்.
நிராகரிக்கப்படும் மனுதாரர்களுக்கு அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த கடந்த 13-ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவித்திருந்தோம். அன்று சிறப்பு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெயர் சேர்க்கைக்கு மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட முகாம்களில் சென்னையில் மட்டும் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 2.98 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. கடைசி நாளையும் சேர்த்து மொத்தம் 5 லட்சம் மனுக்கள் வந்து குவிந்துள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும்.
இந்த தடவை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். அது என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் நிராகரிக்கப்படும் மனுதாரர்களுக்கு அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கடிதம் மூலம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications