ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ராசா உயிருக்கே ஆபத்து!-சாமி போடும் 'குண்டு'
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ராசாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "அதிகாரத்தில் உள்ளவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் தகவல்கள் ஆ.ராசாவிடம் உள்ளது. இதன் காரணமாக அவரை நிரந்தர அமைதியாக்க சிலர் முயன்று வருகிறார்கள். எனவே அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்..." என்று கூறியுள்ளார்.
மேலும், ராசா மீது நடவடிக்கை கோரி தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் சுப்ரீம் கோர்ட் அதிருப்திக்கு உள்ளான பிரதமர், அதற்காக ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும் அவர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications