சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: 20 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: சபரி்மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வந்த பக்தர்கள் சுமார் 14 மணி நேரம் காத்திருந்து நேற்று காலை 6 மணிக்கு தான் ஐயப்பனை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலால் 20 பேர் படுகாயமடைந்தனர்.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். பின்னர் சபரிமலை புதிய மேல்சாந்தி சசிநம்பூதரியும், மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்தியாக தனஞ்செயன் நம்பூதரியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலை நடை திறந்ததுமே கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க முடியாத பக்தர்கள் அனைவரும் விடிய, விடிய வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் நேற்று முன்தினம் இரவு காத்திருந்த பக்தர்கள், நேற்று இரவு குவிந்த பக்தர்கள் என சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால நெரிசல் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
நெரிசலில் சிக்கி சிறுவர்கள், சிறுமிகள், வயதான பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீ்ட்டு சன்னிதானம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பம்பைக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வந்த பக்தர்கள் சுமார் 14 மணி நேர காத்திருந்த பிறகு நேற்று காலையில் தான் ஐயப்பனை தரிசிக்க முடிந்தது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிவேக அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications