குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-கனமழை எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் இன்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வட்டணத்தில் 19 செ.மீ. மழை பதிவானது. தொண்டியில் 13 செ.மீயும் ராமநாதபுரத்தில் 11 செ.மீயும் பழனி, கும்பகோணம், மருங்காபுரி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீயும் மழை பெய்துள்ளது.
இந் நிலையில், இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கைக்கு மேலே வளிமண்டலத்தில் உருவான காற்று சுழற்சி தொடர்ந்து அங்கேயே நீடிக்கிறது. இதற்கிடையே, இலங்கை அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications