பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தை மீடியாக்கள் திசை திருப்புகின்றன-தயாநிதி மாறன்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை இப்போதைய பிரச்சினையுடன் முடிச்சுப் போட்டு சில ஊடகங்கள் திசை திருப்பி குழப்பப் பார்க்கின்றன. மேலும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக வெளியிடாமல் அவை பாரபட்சமாக செய்தி வெளியிடுகின்றன என்று கூறியுள்ளார் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், தற்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கடந்த 2006ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தற்போதைய பிரச்சனையோடு தொடர்பு படுத்தி சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தவறானது.
கடுகை மலையாக்க ஊடகங்கள் முயலுகின்றன. பிரதமருக்கு எழுதிய அந்த கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டு சர்சையாக்க முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது.
ஊடகங்களே இந்த பிரச்சனையின் தீர்ப்பை சொல்ல முனைவது வருத்தத்துக்குரியது.
பிரதமர் மன்மோகன்சிங் மிகவும் துணிவான, நேர்மையான தலைவர். தொலை தொடர்பு துறை அமைச்சர் என்ற முறையில் சில வரையறைகளை அறிந்துகொள்வதற்காக மட்டுமே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் வசம் இருந்த அலைக்கற்றையை தொலைத் தொடர்புத்துறை வசம் கொண்டு வர முயற்சித்தது நான் தான். அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற செய்தி முற்றிலும் தவறானது.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நான் இருந்தது வரையில் ஒரு சிறு சர்ச்சையும் இல்லை.
திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதை சிதைக்கும் முயற்சி பலனளிக்காது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications