எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்குதல்-ஜேபிசி விசாரணைக்கு மத்திய அரசு சம்மதிக்கும்?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படக் காரணமாக இருந்த ராஜா தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால் மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் ராஜாவை நீக்க திமுக சம்மதித்தது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதை வலியுறுத்தி 11 நாட்களாக நாடாளுமன்றத்தை அவை முடக்கி வருகின்றன.
ஒரு நாள் கூட கூட்டத்தை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட 2 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. பிரணாப் முகர்ஜி தலைமையிலான இக்கூட்டங்களில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. ஜேபிசி விசாரணையே தேவை என்று எதிர்க்கட்சிகள் உறுதிபட கூறி வருகின்றன.
இந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில கட்சிகள், பேசாமல் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று கூற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக திரினமூல் காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது. இக்கட்சியின் எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் இணைந்து கோஷமிட்டதால் காங்கிரஸ் குழப்பமடைந்துள்ளது.
இதையடுத்து ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸும், மத்திய அரசும் சம்மதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications