சீனாவுக்கு இந்திய இரும்புத் தாது ஏற்றுமதி கடும் வீழ்ச்சி!
பெய்ஜிங்: சீனாவுக்கான இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதி கணிசமாகக் குறைந்துவிட்டது. இந்த அக்டோபரில் மட்டும் 6.4 சதவீத அளவுக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பொருள்களுக்கான தேவையை கடந்த ஆண்டிலிருந்தே குறைத்துக் கொண்டு வந்தது சீனா. கடந்த ஆண்டு வெறும் 20 சதவீத பொருள்களை மட்டும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த சீனா, மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதியை அதிகரித்துக் கொண்டது.
சீனாவின் இறக்குமதிகளுள் மிக முக்கியமானது இரும்புத் தாதுதான். இதனை பெருமளவில் இந்தியாவிலிருந்து பெற்று வந்தது சீனா.
இந்திய நிறுவனங்களும் சீனாவையே நம்பியிருந்தன. இப்போது திடீரென்று இந்தியாவிலிருந்து பெறும் இரும்புத்தாது அளவை சீனா குறைத்துக் கொண்டுள்ளது. ஆனால், பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளிடமிருந்து இரும்புத் தாதுவை அதிக அளவு இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்திய இரும்புத் தாது தரமானது. எனவே அதிக அளவு இந்தியாவிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று ஏராளமான சீன நிறுவனங்கள் வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தும் கூட, சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்த ஆண்டு சீனாவுக்கு இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதி 2.91 மில்லியன் டன். ஆனால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் குறைவு.
இரும்புத்தாது என்றில்லாமல் பிற இந்தியப் பொருள்களின் இறக்குமதிகளையும் சீனா பெருமளவு குறைத்துக் கொண்டுள்ளது.
சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்டு வரும் பல பொருள்களின் இறக்குமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதன் எதிர் விளைவு இது என்று கூறப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications