'சத்யம்': மேடாஸ் நிறுவனப் பெயர் மாறுகிறது!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தை உருவாக்கிய ராமலிங்க ராஜுவால் நிறுவப்பட்ட இன்னொரு நிறுவனமான மேடாஸ் பெயர் மாறுகிறது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் மூத்த மகன் தேஜா ராஜுவால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிறுவனம் மேடாஸ் இன்ப்ரா. ராமலிங்க ராஜுவின் ரூ 14000 கோடி ஊழல் காரணமாக சத்யம் சாம்ராயம் சரிந்துவிழ, முக்கிய காரணமே இந்த மேடாஸ்தான். இந்த நிறுவனத்தை சத்யத்துடன் இணைக்க ராஜு முயன்றபோதுதான், சத்யம் சரிந்தது.
இப்போது சத்யம் மஹிந்திராவின் கைக்குப் போய், மஹிந்திரா சத்யம் என்ற பெயரில் இயங்குகிறது. அடுத்து, ராஜுவின் மகன் வசமிருந்த மேடாஸ் இப்போது ஐஎல் அண்ட் எப்எஸ் வாங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பெயரை முழுமையாக மாற்ற ஐஎல் அண்ட் எப்எஸ் முடிவு செய்துள்ளது.
சத்யம் என்பதை திருப்பிப் போட்டால் மேடாஸ் என்று வரும். எனவே ஏற்கெனவே பிரச்சினைக்குள்ளான சத்யம் நிறுவன நிழல் எந்த வகையிலும் மேடாஸில் படியக்கூடாது என்று விரும்பும் ஐஎல் அண்ட் எப்எஸ், இப்போது மேடாஸின் பெயரை, "ஐஎல் அண்ட் எப்எஸ் எஞ்ஜினீயரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி" (IL&FS Engineering and Construction Company) என்று மாற்றியுள்ளது.
இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் கவுசிக் தெரிவித்தார். 2011 ஜனவரி முதல் இந்த புதிய பெயரில் நிறுவனம் இயங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications