முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி் மீண்டும் மனு-அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: என்னை விடுதலை செய்யவேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கவில்லை. விடுதலை குறித்த எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளேன். எனவே எனது மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் தன்னை சிறையில் சித்திரவதை செய்வதாக அவர் புகார் கூறியதைத் தொடர்ந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி அரசுக்கு விண்ணப்பித்தார். அதை தமிழக அரசு நிராகரித்தது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட், இதுகுறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து புதிதாக சிறை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் நளினியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்நது மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் நளினி. அந்த மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடியானது.
தற்போது இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் நளினி.
அதில்,
மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை செய்ய கோர முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற உத்தரவு எதுவும் எனது விடுதலையை மறுத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். என்னை விடுதலை செய்யவேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கவில்லை. விடுதலை குறித்த எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளேன். எனவே எனது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் 6.4.10 அன்று பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் நளினி.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பே தர்மாராவ், அரி பரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2 வாரத்திற்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications