ஜனவரிக்குப் பின் கூட்டணி குறித்த முடிவு: ராமதாஸ்

காங்கேயத்தில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட ராமதாஸ் கூறுகையில்,
பல ஆண்டு கால கோரிக்கை திட்டமான ஈரோடு- பழனி ரயில் பாதை திட்டத்துக்கு, ஆங்கிலேயர் இயற்றிய பழைய சட்டத்தின்படி நிலம் ஆர்ஜிதம் செய்வது முறையல்ல. அந்த சட்டத்தை திருத்தி ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் போல் சந்தைவிலை கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், நிலம் இழக்கும் குடும்பத்தின் வாரிசுக்கு வேலை, 30 ஆண்டுகளுக்கு உதவித் தொகை, ஆகிய சலுகைகள் வழங்க வேண்டும். இத் திட்டத்திற்கு எதிராக போராடுவதால் நான் அரசுக்கு எதிரானவன் என மாநில அரசு கூறி வருகிறது. பாமக என்றுமே மக்களுக்காக போராடும்.
வறுமையை ஒழிப்போம் என்று அரசு கூறி வருகிறது. ஆனால், மதுக்கடைகள் அதிகரித்துள்ளதால், வறுமை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
மாநில அரசு, இலவச மின் மோட்டார்களை இரண்டு லட்சம் பேருக்கு வழங்குவதாகக் கூறி செயல்படுத்தியது. இதில், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தற்போது, எந்தக் கூட்டணியிலும் பாமக இல்லை. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே வெளியிடப்படும். அதுவரை எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது.
தற்போது, ஜவுளித் தொழில் சந்தித்துவரும் நெருக்கடிக்கு மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கையே காரணம். இதனால், வட இந்திய வர்த்தகர்கள் பெருமளவில் பஞ்சு, நூல் பதுக்கி கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.
இப் பாதிப்புகளை தடுக்க உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதோடு, முன்பேர வர்த்தக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அந்த குழுவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரே தலைவராக இருப்பார். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதிக அளவில் உறுப்பினர்களாக நியமிக்கப்படவும் வழி இருக்கிறது. எனவே கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவது பயன்தராது என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications