ஸ்பெக்ட்ரம்-எதியூரப்பா விவகாரம்: நாடாளுமன்றம் 10வது நாளாக முடக்கம், ஒத்திவைப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் மற்றும் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவின் நில ஊழல் விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்-அமளியால் இரு அவைகளும் இன்று 10வது நாளாக முடங்கின.
ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற பாஜக, சிவசேனா, அதிமுக, இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை.
இதனால் அவையை நடத்த விடாமல் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இன்று மக்களவை கூடியதும் பாஜக, அதிமுக எம்.பிக்கள் எழுந்து, கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கோஷமிட்டனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பிக்கள் எழுந்து, கர்நாடகத்தில் நில ஊழல் செய்த எதியூரப்பாவை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் குரல் எழுப்பினர்.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் மீராகுமார் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து மக்களவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுந்து அரசை எதிர்த்து கோஷமிட்டனர். காங்கிரஸ் எம்.பிக்கள் முதலில் எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசில் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபாநாயகர்.
அதே போல மாநிலங்களவையிலும் இந்த இரு விவகாரங்களால் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டதால், அந்த அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் நாடராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து 10வது நாளாக முடங்கிது.
சிக்கலை தீர்க்க முடியவில்லை-பிரணாப்:
இந் நிலையில் இந்த விவகாரத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண என்னால் முடியவில்லை.ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications