மும்பை தாக்குதல்: இந்தியாவின் சோகத்தில் பங்கேற்கிறோம்-ஹில்லாரி கிளிண்டன்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அமெரிக்க வெளியிறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது மட்டுமல்லாமல் எப்போதும் இந்தியாவுக்கு அமெரிக்கர்களின் ஆதரவு உண்டு. மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியான சம்பவத்தை நினைவுகூரும் இந்த தருணத்தில் இந்தியாவின் சோகத்தில் நாங்கள் பங்கேற்கிறோம்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிகள், குண்டுகளை விட மக்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், துணிச்சலும், எதிர்ப்புக் குணமும்தான் சக்தி வாய்ந்தவை.
அமெரிக்க தேசம் தேங்க்ஸ்கிவிங் தினத்தை கொண்டாடி வரும் இந்தநேரத்தில், மும்பையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அப்பாவி மக்கள், குறிப்பாக பெண்கள், குழ்நதைகள் ஆகியோருக்காக ஒட்டுமொத்த அமெரிக்காவும் இரங்கல் தெரிவிக்கிறது, அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications