வருமான வரியை இனிதேசிய வங்கிகளில் செலுத்தலாம்!

Subscribe to Oneindia Tamil

RBI
சென்னை: வருமான வரியை இனி அனைத்து தேசிய வங்கிகளிலும் செலுத்தலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரிசர்வ் வங்கியில் டிசம்பர் மாதக் கடைசியில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிக அளவில் வருகிறது. இந்த காலத்தில் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டும், வரிப் பணம் வசூலிப்பதில் சிரமம் உள்ளது. இதனால் வரிசெலுத்துவோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு வெகு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம்.

இந்திய ரிசர்வ் வங்கி தவிர, தமிழகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, அலாகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பொரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடீபிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகிய வங்கிகளில் தங்களது வரிகளைச் செலுத்தலாம்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+