தூத்துக்குடி: கனமழைக்கு 102 வீடுகள் சேதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 102 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில்தொடர்ந்து 3 வாரங்களாக பருவ மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 69 வீடுகள் மழைக்கு சேதமடைந்தன. தொடர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி தூத்துக்குடி கீழரத வீதியில் ஒரு வீடும், ஓட்டப்பிடாரத்தில் 17 வீடுகளும், விளாத்திகுளத்தில் 7 வீடுகளும் மொத்தம் 33 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழைக்கு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 102 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று முன்தினம் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 320 படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே இன்னும் 2 நாட்கள் மழையும், காற்றும் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி நகரில் விடிய விடிய பெய்த மழையால் தூத்துக்குடி திருவிக நகர், இந்திரா நகர், எஸ்எஸ் காலனி, கந்தன் காலனி, அமுதா நகர், ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications