புதுவையில் ஒரு வார கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி: புதுவையில் ஒருவாரமாகத் தொடர்ந்து மழைபெய்து வருகின்றது. இரவு பெய்த மழையால் புதுவையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாதபடி செய்துவிட்டது.
குறிப்பாக கிருஷ்ணா நகர், சூரியகாந்திநகர், எழில்நகர், வசந்த் நகர்,ரெயின்போநகர்,வெங்கட்டா நகர் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாததால் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
மாடி வீடுகளில் உள்ள மக்கள் கீழே இறங்காமல் உள்ளனர். பால், உணவுப்பொருட்கள் இல்லாமல் குழந்தைகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.
கிருஷ்ணாநகர் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணிக்காக பாதையைத் தோண்டி ஓராண்டாகியும் இன்னும் பாலம் கட்டாமல் அரசு மெத்தனம் காட்டுகிறது.
பாலம் கட்ட மண் தோண்டி போடப்பட்டுள்ளதால் தண்ணீர் ஓடவழியில்லை. மேலும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை அகற்றும் எந்த நடவடிக்கையும் அரசு செய்யவில்லை. அரசு மக்களுக்கு அவசர காலத்தில் உதவுவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. குறைந்த அளவு தேங்கியுள்ள தண்ணீரை இறைத்திருக்கலாம். பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
கழிவுநீர் குடிநீரில் கலந்துவருகின்றது. தூய்மையான குடிநீர் இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கலாம் என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications