எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தின் நோக்கம் அம்பலமாகி விட்டது-நெடுமாறன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது விரைவாக நடைபெறவில்லை என தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முதல்வரின் கவலை நியாயமானதுதான். ஆனால் இலங்கை அரசுக்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆனால், இவருடைய கூற்றை மறுக்கும் வகையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதையும், மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமாகக் கருதுகிறது என கூட்டுக் குழு கூட்டத்துக்குப் பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எஸ். பெய்ரிஸ் பேட்டி அளித்துள்ளார்.
இதன் மூலம் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவரும் பல லட்சம் தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே அவர் பேசியுள்ளார்.
காவிரி படுகையிலும் மன்னார் கடல் பகுதியிலும் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திரிகோணமலை மாவட்டத்தில் சாம்பூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துத்தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன.
மேலும் வட இலங்கையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி வரை நிதியுதவி அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார உதவிகள் மூலம் சீனா பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications