பிளஸ் 2 போலிச் சான்றிதழ் கொடுத்த நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவி டிஸ்மிஸ்
நெல்லை: போலிச் சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேர்ந்த நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள மேலச்செவலையைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகள் சோனா. பிளஸ்டூ முடித்த இவர் இந்தாண்டு சென்னையில் நடந்த மருத்துவ படிப்புக்கான கவுன்சிலங்கில் கலந்து கொண்டார். இவருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது.
இங்கு படித்து வந்த இவர் முதலாமாண்டுக்கான தேர்வையும் எழுதினார். ஆனால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திடம் கேட்டபோது மாணவி சோனா கவுன்சிலிங்கின்போது போலி பிளஸ் டூ மார்க் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசின் தேர்வுத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மாணவி சோனைவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
மேலும் போலிச் சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்கல்வி படிப்புகளில் மாணவ-மாணவிகள் சிலர் போலிச் சான்றிதழ்கள் தயாரித்து கல்லூரியில் சேர்ந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போலிச் சான்றிதழ் கொடுத்த மாணவ, மாணவிகளை கைது செய்தனர்.
இந்நிலையில் நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரும் போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications