'6வது முறையும் முதல்வராவார் கருணாநிதி': ஸ்டாலின்
விருதுநகர்: தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதி மீண்டும் முதல்வராவார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.597 கோடி மதிப்பீட்டிலான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய ஸ்டாலின்,
இங்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது பற்றி குறிப்பிட்டார். ஒரு காலத்தில் அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் ஏதாவது பணியில் தவறு செய்து விட்டால் அவர்களுக்கு தண்டனையாக தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன் என்று கூறி ராமநாதபுரத்துக்குத் தான் மாற்றுவார்கள்.
தற்போது அப்படி சொல்ல முடியாது. ராமநாதபுரத்திற்கு ரூ.614 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் சப்ளையை நல்ல முறையில் பெற்று வருகிறது.
இதே போன்று ரூ.234 கோடியில் கோவை கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.105 கோடியில் நாகப்பட்டினத்திற்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தைப் போன்று குடிநீர் பிரச்சனை உள்ள வேலூர் மாவட்டத்திற்கும் ரூ.1314 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நாங்கள் ஆட்சிக்காக அலைபவர்கள் அல்ல. மக்கள் நலனுக்காகவும், மக்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தான் ஆட்சியில் இருக்கிறோம்.
இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல முதல்வர் கருணாநிதி 6வது முறையும் முதல்வராக பதவி ஏற்பார். நீங்கள் காட்டும் ஆர்வமும், தரும் ஆதரவும் அதை உறுதி செய்கின்றன என்றார்.
பின்னர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கீழாண்மறைநாடு கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து ஸ்டாலின் பேசுகையில்,
திமுக ஆட்சியில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை 145 இடங்களில் சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக பொறுப்பேற்றது. அதிமுக ஆட்சியின்போது சமத்துவபுரங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இத் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக பழுதான வீடுகள் பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
2006ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சமத்துவபுரங்களைப் பாதுகாக்கவும், கட்டடங்களைப் பராமரிக்கவும் ரூ. 14.50 கோடி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் கருணாநிதி என்றார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications