நெல்லை காங். தலைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்: ஒருவர் விடுதலை
நெல்லை: காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சேர்ந்தவர் சேவியர் ஆம்ஸ்ட்ராங். வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவரான இவருக்கும், அதே ஊர் அந்தோணியர் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணி எடிசனுக்கும் கடந்த 2003-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த சர்ச் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி காவல்கிணறு சந்திப்பு காமராஜர் சிலை அருகே சேவியர் ஆம்ஸ்ட்ராங் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அந்தோணி எடிசன் காவல்கிணறு தங்கசாலை தெருவைச் சேர்ந்த கிங்ஸ்டன், அந்தோணி, திலிபன் ராஜ் ஆகியோர் சேவியர் ஆம்ஸ்டாரங்கிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்த பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி எடிசன் உள்பட 4 பேரையும் கைது செய்து நெல்லை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடந்து வந்த நிலையில் அந்தோணி இறந்து விட்டார்.
இதையடுத்து மீதமுள்ள 3 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பொன் பிரகாஷ் விசாரித்து அந்தோணி, எடிசன், கிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். திலிபன் ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications