ஜெ. சொத்து குவிப்பு வழக்கு:15, 16ல் 10 சாட்சிகளிடம் விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கில் சொத்து குவித்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. அந்த மொழிபெயர்ப்பில் பிழைகள் அதிகமாக இருப்பதாகவும், எனவே அவற்றை ரத்து செய்துவிட்டு மீண்டும் நீதிமன்ற மேற்பார்வையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை மட்டும் திருத்திக்கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அதே நேரத்தில் மீண்டும் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் (இழுத்தடிப்பு) கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந் நிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நேற்று தனி நீதிமன்றத்தி நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் சந்தீப், ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி சாட்சிகள் மறுவிசாரணையை தாமதமின்றி உடனடியாகத் தொடங்குமாறு கோரினார்.
ஆனால், மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து அவற்றை சரிசெய்ய போதுமான கால அவகாசத்தை கேட்டு பெற்றுக் கொள்ள தனக்கு உயர் நீதிமன்றம் உரிமை வழங்கி இருப்பதாகவும், எனவே போதுமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா வரும் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் சாட்சிகள் மறுவிசாரணை நடத்தப்படும் என்றும், அந்த 2 நாட்களில் 10 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications