மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ரூ.1000 கோடியில் சீரமைக்கப்படும்-ஸ்டாலின்
நாகர்கோவில்: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ரூ.1000 கோடி செலவில் விரைவில் சீரமைக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார்.
நேற்று காலை அகஸ்தீவரம் ஊராட்சி ஒன்றியம் கரும்பாட்டூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டதின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது ஜெகன், மணிகண்ட ராஜன், பானுமதி ஆகியோரது வீடுகளை திறந்து வைத்து சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் வீடுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.
இதுவரை 3 ஆயிரம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 2011-ம் ஆண்டில் ஆயிரத்து 539 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 580 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதர 959 வீடுகளின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார் ஸ்டாலின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications